அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

செய்திகள்

சிங்கப்பூரிலுள்ள அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர்குழு வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் இணையம்வழி தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக டிசம்பர் 13 ஞாயிறு “அன்பின் வழியது உயர்நிலை” கருப்பொருளில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வை நடத்தியது. 2019 ஆம் ஆண்டின் அரசு நல்லாசிரியர் விருது பெற்ற திருவாட்டி காத்தாயம்மாள் செல்லையா பீட்டர் – 2020 இல் மிகச் சிறந்த தாதிக்கான அதிபர் விருது பெற்ற திருவாட்டி கலா மற்றும் இவ்வாண்டுக்கான தொண்டூழியம் – கொடை இவற்றிற்கான அதிபர் விருது பெற்ற திருவாட்டி தீபா ஸ்வாமிநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் அனுபவங்களை விளக்கினார்கள். ஒவ்வொருவர் அனுபவமும் எதிர்கால சந்ததியினருக்கு பாடமாக அமைந்தது.

பின்னர் கவிஞர் புகழேந்தி பார்வையாளர்களின் வினாக்களைத் தொகுத்து விருத்தாளர்களிடையே கலந்துரையாடினர். இவர் சம்பவங்கள் மனிதநேயம் மிகுந்தது. இவர் போலித்தன்மையற்ற உரையாடல்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. முன்னதாக அமைப்பின் தலைவர் கவிஞர் அ.கி.வரதராஜன் வரவேற்புரையும் நிறைவாக நன்றியுரையும் ஆற்றினார். நிகழ்வினைத் தாமரைச்செல்வன் சுவைபட நெறிப்படுத்தினார். “அன்பின் வழியது உயர்நிலை” – தமிழ்மொழி விழாவின் முத்தாய்ப்பு எனலாம்.