பிரதமர் மோடி சென்னை வருகை : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு

செய்திகள்

சென்னை : வருகின்ற 14ஆம் தேதி பிரேதமர் மோடி சென்னை வருகை தர உள்ளார். அதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 14ஆம் தேதி சென்னை வருகிறார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பண்ணீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க்க உள்ளார்கள்.

பிரதமர் வருகையையொட்டி, அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, பிப்ரவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தில், தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டி.ஜி.பி., திரிபாதி, அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

நான்கு அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி, 3 மணி நேரம் மட்டுமே இருப்பார். காலை 7.50 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பி, காலை 10.35 மணிக்கு சென்னை வந்தடைகிறார். நேரு உள் விளையாட்டு அரங்கில், நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி, 1.35 மணிக்கு கொச்சிக்கு கிளம்புவார், பிரதமர் வருகையை முன்னிட்டு 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.