பிரான்ஸில் – முதல் தமிழ் நூலகம்

செய்திகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது தமிழ் நூலகத்தையும், வாசகர் வட்டத்தையும் அங்கு வாழும் தமிழர்கள் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதுவே ப்ரான்ஸில் முதல் பொது நூலகமாகும்.

மேலும் தமிழ் புத்தகங்களை மின்மயப்படுத்தும் பணிகளும், பிரெஞ்சு-தமிழ் ஆன்லைன் அகராதி உருவாக்கும் பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஆவணப்படுத்துவது, வரலாறு, இலக்கியம், கலை, அறிவியல் என்று பல்வேறு துறைகளில் பல முக்கிய நூல்களை சேகரிக்கவும், பாதுகாக்கவும் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.