ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

செய்திகள்

தீபாவளி என்பது தமிழர் பண்டிகையா? என்று ஆரம்பித்தது இந்த வருட தீபாவளி. இளந்தமிழர் குழு முதலாம் ஆண்டு மாணவரின் காணொளி. தீபாவளி தமிழர் பண்டிகை என்பதையும், ஐப்பசி அம்மாவாசை அன்று தீபம் ஏற்றி வழிபட்டதாகயும் சங்க நூல்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். அகநானூறு என்ற சங்க இலக்கியத்தில் வரும் 141வது பாடல் இதனை விளக்குகிறது.

இராஜேந்திர சோழன் 1023ஆம் ஆண்டு வெற்றியை தீப விளக்கேற்றி கொண்டாடினார்கள் – கும்பகோணம் திருலோக்கி கிராமத்தினர் என்பதை அவ்வூரிலுள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். பலகாரம், வேட்டுக்கள் செய்தும், கறி, மீன் சமைத்தும், பதினோராம் நூற்றாண்டிலேயே கொண்டாடப்பட்டது என்பதை ஒரிசா பாலு காணொளி வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

பலவித விருந்துகளுடன் தான் ஹாங்காங்கில் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளியோ அதையெல்லாம் இல்லாமல் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கொரோனா ஒழிய வேண்டும் என்றே கொண்டாடப்பட்டது.