சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் முதலமைச்சர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகரும் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அணிவகுப்பை முதமைச்சர் விஜய் ஏற்றார். தொடர்ந்து அவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் லோகோவை வெளியிட்டார். மேலும் படைக்கான ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார். ரோந்து வாகனத்தை முதலமைச்சர் விஜய் இயக்கியும் பார்த்தார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான ஐஜியாக பவானிஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களுக்கு கூடுதல் சிறப்புகள் இடம் பெறும். இந்த திட்டத்திற்கு 354 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 2500 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ட்ரோன் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் பெண்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தை கொண்டு வந்த காவல்துறையினருக்கு மிகவும் நன்றி. இது ஒரு அரசின் முதல் வெற்றி முழுமையான வெற்றி. ஒரு அரசு வெற்றி பெற வேண்டுமென்றால் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

