துருக்கி நிலநடுக்கத்தை மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 2 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,372-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.
துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பேரிடரை தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், துளையிடும் இயந்திரங்கள், அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.