செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த நாட்டுப்புற பம்பை இசை கலைஞர்கள் 111 பேர் ஒன்றிணைந்து நோபல் உலக சாதனைக்காக 5 மணி நேரம் தொடர்ந்து பம்பை இசைத்தனர்.
இவர்களை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியை நோபல் உலக சாதனைக்காக டெல்லி குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.