தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு

இந்தியா சிறப்பு செய்திகள் வரும் நிகழ்ச்சிகள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தாண்டு 16,888 பேருந்துகள் இயக்கப் பட இருக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு நடைபெறும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,062 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,152 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 4256151 என்ற டோல் பிரீ எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும் தொலைபேசியிலும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்”.
மாதவரத்தில் இருந்து செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதிக்கு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப் பட உள்ளது.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.