குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சமீபத்திய ABP-CVoter கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் அடிப்படையில் பாஜக 49.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2017 குஜராத் தேர்தலில் பெற்றதை விட 0.4 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 117 இடங்கள் முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்கள் முதல் 51 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்கள் முதல் 13 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டிவி – பி. மார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் குஜராத்தில் பாஜக 128 தொகுதிகள் முதல் 148 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளது. காங்கிரஸ் 30 முதல் 42 தொகுதிகள் வரையிலும், ஆம் ஆத்மி 2 முதல் 10 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்றும் அது கணித்துள்ளது.