20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில், 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் சினிமா விருதுகளை வழங்க விரைவில் குழு அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்(ஐசிஏஎப்) சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 20-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று (டிச.15) தொடங்கியது. வரும் 22-ம்தேதி வரை விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் பிவிஆர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த திரைப்பட திருவிழா 8 நாட்கள் நடைபெறும். உலகளவில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கிய சிறந்த திரைப்படங்கள் இந்தாண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. 2003-ம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. 2008-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவிடன் இவ்விழா நடைபெற்று வருகிறது.
சென்னை சத்யம் சினிமா வளாகத்தில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம், ஒவ்வொரு நாளும் 20 படங்கள் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *