இன்றையக் காலகட்டம் சமூகவலைதளங்களின் காலம் என்பதால் அதன் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாகிறது. உலகளவில் சமூக வலைதளஙங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இச்சமூக வலைதளங்களால் மக்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும் மிக எளிமையாக உள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் மிகவும் பிரபலம். வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிது. ஆடியோ, வீடியோ தகவல்கள் மற்றும் வீடியா அழைப்புகள் செய்யவும் மிகவும் எளிமை வாட்ஸ்அப்பில்.
இவ்வாறான வசதிகள் வாட்ஸ்அப்பில் இருப்பதால் இச்சமூக வலைதளம் சில நேரங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொய்யான தகவல்களை பரப்புதல் மற்றும் கலவரத்தைத் தூண்டுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்றவை எளிதாக நடப்பதால் சமூகத்தில் பல பிரச்சனைகள் எழுகின்றது.
இதனால் வாட்ஸ்அப் நிர்வாகம் அவ்வப்போது தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றது. நடவடிக்கைகள் எடுத்தாலும் வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் பரவுவதை முற்றிலுமாக தடுப்பது மிக மிக சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் 24 லட்சம் கணக்குகளை நிரந்தமாக முடக்க முடிவெடுத்துள்ளது. இதேப்போல சந்தேகத்திற்கு இடமான 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை ஏற்கனவே முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.