தமிழ்திரையுலகில் சூர்யாவின் 25 ஆண்டுகள், நடிப்புப் பயணமும், பொதுசேவையும்

சினிமா செய்திகள் தமிழ்நாடு

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் 1997ம் ஆண்டு “நேருக்கு நேர்” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனாவார். இவர் நடித்த முதல் படம் “நேருக்கு நேர்” நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த திரைப்படம். அது வெற்றியடைந்த போதிலும் சூர்யா சிறந்த நடிகர் என்ற பெயரை அறிமுகப் படத்தில் பெறமுடியவில்லை. அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கினாலும் சூர்யா சிறந்ததொரு இடத்தை பிடிக்கமுடியவில்லை.
சில ஆண்டுகள் கழித்து பாலா இயக்கத்தில் உருவான நந்தா மிகப்பெரிய ஒரு ஆரம்பத்தைப் பெற்றுத் தந்தது சூர்யாவிற்கு. அவரது நடிப்பும், உடல்மொழியும் பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்திற்குப் பிறகு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தார். அதன் பின் அவர் நடித்த “காக்க காக்க”, “பிதாமகன்”, “பேரழகன்”, “சில்லுனு ஒரு காதல்” போன்ற படங்கள் அவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்தது.
முதல் பத்து ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர் என்ற இடத்தையும் பெற்றார். இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும், அதற்காக சூர்யா எடுக்கும் முயற்சிகளும் பலரால் பாராட்டப்பெற்றது. சூர்யா ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் உலகின் 100 சக்தி வாய்ந்தவர்களில் இடம்பிடித்தார். பிறகு பல விளம்பர படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. இவரது கதாபாத்திரங்கள், நடிப்பும் பெரிதும் பேசப்பட்டு முன்னணி இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் சூர்யாவிற்கு அமைந்தது. இவர் பிரபல நடிகை ஜோதிகாவை 2006 திருமணம் செய்துகொண்டார். இவரது தம்பி கார்த்தி சிவகுமார், இவரும் பிரபல தமிழ் நடிகராவார்.
இவர் திரைப்படங்கள் நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் பொதுசேவைகளும் பல செய்து வருகிறார். அகரம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி, ஏழை மாணவர்களின் கல்விச் செலவை இவரே ஏற்று அவர்களின் கல்வியில் உதவி வருகிறார். சமீப காலத்தில் இவரது அகரம் அமைப்பால் உதவிப் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம். இவர் 2D என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இத்தனைப் பெருமைக்குறிய சூர்யா சினிமாத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். 25 ஆண்டுகள் பயணித்தில் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப் போற்று படத்திற்கு வென்றுள்ளார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.