கடந்த 12ஆம் தேதி நீயூயார்க்கின் புருக்லின் நகரின் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்தியவனின் அடையளம் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அவன் குறித்து தகவல் தருபவர்களுக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்து, 13 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிய நபரின் அடையாளத்தை, நியூயார்க் போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். அவனின் பெயரை வெளியிடாமல், அங்க அடையாளங்கள் குறித்த விபரங்களை மட்டும் வெளியிட்டு உள்ளனர். 62 வயதான அவன் இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுப்போருக்கு, 38 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பொதுமக்களை 33 முறை சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.