44வது செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் கோலாகலம்

இந்தியா தமிழ்நாடு விளையாட்டு

44து செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது. செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா, போட்டிகள் நடத்துவது மற்ற இதர வசதிகள் என போட்டிகள் நிறைவு விழா வரை அனைத்தும் தமிழக அரசு கவனித்துக் கொள்ளும். விழாவை இந்திய பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைக்க செஸ் ஒலிம்பியாட் துவங்கியது.
2020ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த இத்தொடர் கோவிட் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்தாண்டு நடைபெற திட்டமிட்ட நிலையில் ரஷ்ய உக்ரைன் போர் காரணமாக அங்கு செஸ் ஒலிம்பியாட் நடக்க வாய்ப்பில்லை என கருதி இந்தியாவின் செஸ் தலைநகரமான சென்னைக்கு மாற்றப்பட்டது. நான்கே மாதங்கள் இருந்த நிலையில் ஏற்பாடுகள் அதித்தீவிரமாக மேற்கொள்ளப் பட்டன.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க 187 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள், வீராங்கனைகள் வந்துள்ளனர். இந்தியா சார்பில் (ஏ, பி, சி) மொத்தம் மூன்று அணிகள் களம் காண்கின்றன. இந்திய வீரர் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மேற்பார்வையில் இந்த ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் ஜூனியர் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் போன்றவர்களும் களத்தில் உள்ளனர். இதுவரை ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணி வீரர்கள் வெற்றிப் பெற்று ஆதிக்கம் செலுத்து வருகிறார்கள் என்பது குறிப்படத்தக்கது.
நடப்பு உலகச் செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல். போட்டியில் பங்கேற்றுள்ள மற்ற நாடுகளின் வீரர்களுக்கான தங்கும் வசதி, உணவு என அனைத்தையும் தமிழக அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. 2000 வீரர்கள் குவிந்துள்ளதால் மாமல்லபுரம் நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் தினந்தோறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 10ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. துவக்க விழாவை போலவே நிறைவு விழாவையும் சிறப்பாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தமிழ் திரைப்பட் இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.