அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. இருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 16கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்திருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சமயம் அங்குள்ள கட்டிடங்கள் குழுங்கின. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்நிலநடுக்கத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் விவரம் மற்ற சேதங்கள் குறித்து விரிவான தகவல்கள் எதுவும் இல்லை.