அமெரிக்காவில் பெருகி வரும் தூப்பாக்கி கலாச்சாரம் – மீண்டும் ஓர் துப்பாக்கி சூடு சம்பவம், 6 பேர் பலி

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா

2023ஆம் ஆண்டில் இரண்டே மாதங்களில் 73 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன என அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் மிஸிசிப்பி மாகாணத்தில் நேற்று கோர துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள அர்கபட்லா நகரில் அடையாளம் தெரியாத நபர், அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நிகழ்த்தினார்.
இதில் கடை, வீடு என வெவ்வோர் இடங்களில் 6 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். அவரது பெயர் ரிச்சர்ட் டாலே எனவும் வயது 53 என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவரிடம் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *