மக்களவைக்கான 3-ம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது தற்போது நடைபெற்ற தேர்தலில் 5 % வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
அசாமில் 4 தொகுதிகளில் 75%, பீகாரில் 5 தொகுதிகளில் 57%, சத்தீஸ்கரில் 7 தொகுதிகளில் 67%, கோவாவில் 2 தொகுதிகளில் 74%, கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 68% மத்தியப்பிரதேசத்தில் 9 தொகுதிகளில் 63%, குஜராத்தில் 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 57%, வாக்குகள் பதிவாகியுள்ளது.
மராட்டியத்தில் 11 தொகுதிகளில் 55%, உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகளில் 57% , மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் 74%, தத்ரா நகர் ஹவேலி, டாமன் & டையுவில் 2 தொகுதிகளில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.