உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு அடக்குமுறைகள், கலவரங்கள் மற்றும் போர்கள் முதலான காரணங்களால் இந்தாண்டு மட்டும் சுமார் 67 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு சேகரித்த தகவலின் படி இந்தாண்டு மட்டும் 67 பத்திரிக்கையாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பாட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு 40 பத்திரிக்கையாளர்கள் இறந்ததாகவும், இந்தாண்டு காதைவிட 20 அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
உக்ரைன்- ரஷ்யா நாடுகளிக்கிடையே நடக்கும் போர், மெக்சிகோ நாட்டில் நடந்த கலவரம் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் நடந்த வன்முறைகள் என 2022ல் இத்தனை ஊடகவியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.