வைர விழா சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் இந்தியா

இந்தியா முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்திய திருநாட்டின் வைர விழா சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாப்படுகிறது. 2020/2021 இந்த இரண்டு ஆண்டுகளும் கொரோனா பரவல் காரணமாக மிக எளியைமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம், இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை அடுத்து வெகு விமர்சியாக கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கு “சுதந்திரத்தின் அமுத பெருவிழா” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விடுதலைக்குப் பாடுபட்ட மிகவும் அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களை மையமாக கொண்டாடப்படுகிறது இந்தாண்டு விடுதலை நாள். 1997ல் 50ம் ஆண்டு சுதந்திர தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்தியாவின் சிறப்பைச் சொல்லும் பாடல் இன்றளவும் பிரபலம்.
நாடு விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதால் வீடுகள் தோறும் மூவர்ண தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் தங்கள் சமூக வளைதளப் பக்கங்களில் தேசியக் கொடியை வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. நாட்டிலுள்ள அநேக பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்கள் முகப்புப் படத்தை தேசியக் கொடியாக மாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு அங்கன்வாடி ஊழியர்கள், தெருவோர வியாபாரிகள் போன்றோர் தான் சிறப்பு விருந்தினர்களாக கவ்ரவிக்கப்படுவார்கள் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *