உலகச் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் துபாய் – பிரம்மாண்டங்களின் அதிசயம்

அரபு நாடுகள் உலகம் சுற்றுலா செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்களின் ஒரு மாகாணம் துபாய். உலகச் சுற்றுலா பயணிகளின் கனவு தேசம் தான் இந்த துபாய். ஏழு எமிரேட்கள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ன் ஒரு பகுதி தான் துபாய். வளம் கொழிக்கும் நகரம் இந்த துபாய் நகரம். 34 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட இந்த நகரம் உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் உலகிலேயே மிகவும் வசதிகளோடு அதிக யணிகளைக் கவரக்கூடிய போக்குவரத்து சேவையாகும். துபாய் விமான நிலையம் உலகின் தலைசிறந்த, மிகப்பெரிய விமான நிலையமாகும். இப்படி அனைத்து சர்வதேச வசதிகளுடன் உலகச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது துபாய். துபாய் உலகின் அதிக செலவினம் கொண்ட நகரமாகும். ஒருகாலத்தில் எண்ணெய் வளம் கொண்ட நகரமாக இருந்தாலும், இன்னும் இருபது ஆண்டுகளில் எண்ணெய் வளம் முழுவதும் தீர்ந்துப் போக வாய்ப்புள்ளதாகப் கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், நிதி சேவைகள் போன்றவைகள் துபாய் பொருளாதாரத்தின் பங்குகளாக உள்ளது.
உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா, கடலில் உருவாக்கப்பட்ட பனைமரம் வடிவிலான குடியிருப்புகள், பாலைவன ஜீப் சாவாரி, உலகின் மிகப்பெரிய கடலுக்கு அடியில் இயங்கும் உயிரியல் பூங்கா, அட்லான்டிஸ் மெரினா இதெல்லாம் உலகச் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களாம். உலகிலேயே அதிகம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கொண்ட இரண்டாவது நகரம். இதுப்போக அனைவரையும் கவரும் விதமாக நிலா வடிவிவவான உணவு விடுதியையும் கட்ட துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.