ஆவின் பால் வாங்க இனி ஆதார் கட்டாயம் – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு

ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

நுகர்வோருக்கு ஆவின் பால் சரியான முறையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மாதக் கட்டணம் செலுத்தி அட்டையை பயன்படுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் வழங்கி வருகிறது.
ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்திய போதும் அதன் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் பால் பெற்று வந்தனர். இந்நிலையில், அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணியை மேற்கொள்ளுமாறும் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.