தமிழகத்தில் கொண்டாடப்படும் பல திருநாளில் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாம். ஆடிப்பூரம் சக்திகளுக்கு உகந்த நாளாக அறியப்படுகிறது. இந்த திருநாளில் தான் உமாதேவி அவரித்ததாக புராணங்கள் கூறுறின்றன. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆடி மாதத்தில் உதிக்கும் பூரம் நட்சத்திரத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. பூரம் நட்சத்திரம் சுக்கிர பகவானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. சுக்கிரன் பார்வை பாட்டால்தான் வாழ்கையில் சகல செல்வங்களும், தம்பதிகளிடையே சிறப்பான உறவும் மேம்படும் என்ற எண்ணமும் உள்ளது.
ஆடிப்பூர தினத்தில் கோதை நாச்சியார் என்று அறியப்படும் ஆண்டாள் அவதரித்தார். சூடிக்கொடுத்தச் சுடர்கொடி என்று அடைமொழியோடு ஆண்டாள் அழைக்கப்படுகிறார். ஆடிப்பூரத் தினத்தன்று அம்பாளுக்கு சிறப்பு சந்தனக்பாபப்பு அலங்காரமும், இரவில் வளைகாப்பும் நடைபெறுவது வழக்கம். இதனை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனைப் பெற்றுக் கொண்டால் பெண்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரம் சைவத் தளங்கள் மட்டுல்லாது வைணவத் தளங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தார் என்று கருதப்படுவதாலும், ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருவர் என்பதால் இப்பூரம் வைணவத் தளங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றன.
ஆடிப்பூரத் தினத்தன்று திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வழிபடுதல் நன்று. அவ்வாறு செல்லமுடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் சகல எண்ணங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.