மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோயிலில் இருந்த கிணற்றின் சீலிங் இடிந்து விழுந்த விபத்தில் 35பேர் உயிரிழந்துள்ளனர்.
மார்ச் 30ம் தேதி நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயிலில் தீபச் சடங்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோயிலின் கிணற்றின் மீது ஒரு ஸ்லாப் போடப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்லாப் மீது நின்று பலர் தீபங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் ஓரு கட்டத்தில் அதிக பழுவைத் தாங்க முடியாமல் ஸ்லாப் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்லாப் மீது நின்றுக்கொண்டிருந்தவர்கள் அப்படியே கீழே இருந்த கிணற்றில் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற மீட்பு பணிகள் தொடங்கின. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
