பத்து கோடி நஷ்ட ஈடு கேட்டு தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்

NRI தமிழ் டிவி சினிமா தமிழ்நாடு

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று கூறி மீட்டுத் தரும் படி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் அவரை மீட்டு தங்களுடன் இணைத்து வைக்க வேண்டி ஊடகங்களின் வாயிலாக வேண்டியிருந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்திருந்தது.
அது மட்டுமில்லாமல் தங்களைக் கஸ்தூரிராஜா கொலை செய்ய முயன்றதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் வழக்கை தள்ளுபடி பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நேரிடும் எனறு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி கதிரேசன் தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.