நடிகர் விஜய் அரசியலில் இறங்க தமிழத்தில் உள்ள மற்ற கட்சி முக்கியத் தலைவர்களை சந்தித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை பனையூர் பண்ணை இல்லத்தில் சந்தித்து வரும் நடிகர் விஜய் அடுத்தக் கட்ட செயல்களையும் தொடங்கிவிட்டதாக அவரது ரசிகர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக போட்டியிட்ட சிலர் வெற்றியும் பெற்றனர். இதனால் விஜய்க்கு அரசியல் களத்தில் மக்கள் ஆதரவு இருப்பதாக நம்புவதால் தீவிர அரசியலில் இறங்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.
தமிழகத்தில் பல நகரங்களிலும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய் அரசியல் வருகைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்படுவதும் அதிகம் காணமுடிகிறது.