அடிலைட் பொங்கல் விழா 2022

செய்திகள் தமிழ் சங்கங்கள்

பொங்கல் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிfய அறுவடை திருநாளாகும். நமக்குத் தானியங்களை அள்ளித் தரும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பாரம்பரிய திருவிழா இது. இந்த திருவிழா அமைதி மற்றும் மகிழ்ச்சியின் காலகட்டத்தைக் குறிக்கிறது.

இதன் ஒவ்வொரு நாளும் இயற்கையின் பல்வேறு பரிமாணங்களின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் தமிழ் மக்களின் ஒரே பண்டிகை பொங்கல். நெல்லின் நல்ல அறுவடை மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சூரியன், பூமி மற்றும் கால்நடைகளை மக்கள் இத்திருவிழா மூலம் வணங்குகிறார்கள். அனைத்துச் சடங்குகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். இத்திருவிழாவை புவி எங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒன்றாக குழுமி கொண்டாடி வருகிறார்கள்.

தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகம் ஆஸ்திரேலிய தமிழ் மக்களுக்கான தைத் திருநாள் விழாவை “அடிலைட் பொங்கல் விழாவாக நடத்துகிறார்கள்.

அடிலைட் பொங்கல் விழா 2022, வரும் ஜனவரி 19.02.2022 சனிக்கிழமை அன்று விக்டோரியா சதுக்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவானது காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.

விழாவிற்கான அனுமதி முற்றிலும் இலவசம். இங்குள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து இவ்விழாவை நடத்துகிறார்கள்.

விழா குழுவினர் மக்கள் அனைவரையும் குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் பொங்கி சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கீழ் வரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடிலைட் பொங்கல் விழாவில் பின்வரும் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன

-பெண்களுக்கான கோலப்போட்டி

-தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

-முளைப்பாரி எடுத்தல்

-மண் பானை வண்ணம்தீட்டுதல்

-மண் பானை செய்தல்

-குலுக்கல் சீட்டு

  • தமிழ் கலைகள் பயிற்சி பட்டறை

பல்வேறு கடைகள்

-கோட்டை குதித்தல், இயந்திர காளை & பலூன் ஆர்ட்டிஸ்ட் சிறார்களுக்காக.

-மட்டக்குதிரை சவாரி

-ஒட்டக சவாரி

“மேலும் இந்த நிகழ்வை பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு முகநூல் வாயிலாக அனுப்பி அழைப்பு விடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அடிலைட் பொங்கல் விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கூடி களிப்போம். பாரம்பரியம் போற்றுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *