தமிழகத்தில் 2016ல் ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக நான்கு அணிகளாக பிளவு பட்டிகிறது. தினகரன் தனிக்கட்சி அமமுக என்ற பெயரில் நடத்தி வருகிறார். சசிகலாவும், பன்னீர்செல்வமும் அதிமுக தலைமைக்கு உரிமை கோரி வருகினற்னர். தற்போதைய தலைமையான எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும், இடைக்கால பொதுச் செயலாளர் என சமர்பித்த வரவு செலவு கணக்குகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிக தொகுதிகள் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தென்மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், மேற்கு மட்டும் கிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் என இவைகளில் மட்டும் செல்வாக்கு இருப்பதால் பாஜக கூட்டணி பெரிதாக கைக் கொடுக்காது என நினைக்கும் எடப்பாடியார் 40 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்த ஓர் தனியார் ஏஜென்சியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.
அதிமுக தலைமைக் குறித்து இருவரும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.