இந்தியா – அமெரிக்கா ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்பட முடிவு – இருநாடுக்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா

ஆராய்ச்சி திட்டங்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, திட்டங்களின் தேர்வு மற்றும் நிதியுதவி செயல்முறையை ஒழுங்குபடுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம், கணிதம், இயற்பியல், பொறியியல், கணினி உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக்குவதுடன் ஆய்வாளர்களின் விருப்பங்களையும் நிறைவு செய்யும் என தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்எஸ்எப்) இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் என்எஸ்எப் 146 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களை, இந்தியாவின் பல்தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுடன் இணைக்கும் விதத்தில் 35 விருதுகளை என்எஸ்எப்அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.