எய்ம்ஸ் என்பது அனைத்திந்திய மருத்துவ பல்கலைக்கழகமாகும். இந்த எய்ம்ஸ் 1952ம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எய்ம்ஸ்ன் முக்கிய நோக்கம் சிறந்த மருத்துவக் கல்வி வழங்குவது மட்டும் நாட்டில் சிறந்த மருத்துவம் வழங்குவதாகும். எய்ம்ஸ் தலைமையகம் டில்லியில் உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி தமிழகத்தில் இல்லை. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்குமாறு பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மத்தியில் அமைந்த பாஜக அரசு பல ஊர்களை ஆராய்ந்து மதுரையை தேர்வு செய்தது. எய்ம்ஸ் மதுரை 2015-2018 காலகட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரையில் தோப்பூர் என்ற கிராமத்தில் தான் எய்ம்ஸ் மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வரவிருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 200 ஏக்கர் நிலம் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதி கொண்டதாக இருக்கும்.
எய்ம்ஸ் மதுரை மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதில் கடந்த ஆண்டு மட்டும் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. மதுரை வந்த பாஜக தலைவர் நட்டா எய்ம்ஸ் மதுரை குறித்து விளக்கும் போது 95% பூர்வாங்க வேலைகள் முடிந்துவிட்டது விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார். அதாவது நிலம் கையகப்படுத்தல், நிதி ஒதுக்குதல் மற்றும் விரிவான திட்டஅறிக்கை தயாரித்தல், இதர பிற தகவல் சேகரித்தல் போன்ற முன்னேற்பாடு வியஷங்கள் 95% முடிவுற்றதாக கூறியுள்ளார். எய்ம்ஸ் மதுரை மருத்துவமனைக்கு 1264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.