துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் மரணம் – ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

துணிவு திரைப்படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் மரணத்தால் அதிர்ச்சி.
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு திரைக்கு வந்தது.
உற்சாகத்தில் லாரி மீது ரசிகர்கள் நடனம் ஆடினர். அப்போது சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (வயது 19) என்பவர் லாரியில் இருந்து கீழே குதித்தார். இந்த வேளையில் அவர் கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்தார். இதனால் அவர் எழுந்திருக்க முடியாமல் அப்படியே வலியில் அலறி துடித்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரத்குமார் இறந்தார். இதுபற்றி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *