60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்றார் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்

அழுகு குறிப்புக்கள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்.
60 வயதாகும் இவர், சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அலெஜான்ட்ரா ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
இவரது சாதனை அழகுப் போட்டி துறையில் ஒரு புது பரிணாமத்தை உருவாக்கி முன்னுதாரணமாக மாறியுள்ளது. இந்த போட்டி மூலம் அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை ரோட்ரிக்ஸ் படைத்துள்ளார்.
மேலும், அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ் ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டம் வென்றதன் மூலம் தேச அளவிலான ‘மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா’ அழகி போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.
இதனால் மே 25ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா அழகுப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *