உலகளாவிய பொருளாதார மந்தநிலை எதிரொலி – அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

அரசியல் இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள் வேலைவாய்ப்புச் செய்திகள்

அமேசான் நிறுவனமானது 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி  அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் பணிநீக்கங்கள் பெரும்பாலும் நிறுவனத்தின் இ-காமர்ஸ் மற்றும் மனித வள அமைப்புகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஜனவரி 18 முதல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை நிறுவனம் தொடர்பு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,00,000 பேர் கொண்ட கார்ப்பரேட் பணியாளர்களில் இது 6 சதவீதம்.

நிச்சயமற்ற பொருளாதாரத்தை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கையில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் ஊழியர்களை வெகுவாக பணியமர்த்தியுள்ளோம் என்றார் ஜாஸ்ஸி.

இதற்கிடையில், அமேசான் இன்க் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு 8 பில்லியன் டாலர் கடனை வழங்க சில கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்த கடனானது 364 நாட்களில் முதிர்ச்சியடையும், இது மேலும் 364 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந்த நிதியானது நிறுவனத்தின் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றார்.

பணவீக்கம் வணிகங்களையும் நுகர்வோரையும் செலவைக் குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.

அமேசான் மட்டுமல்லாமல் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் கூட தங்களின் ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.