ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிக இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை மிகப்பெரிய பணிநீக்க அறிப்பை அறிவித்துள்ளது. 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அமேசான் அறிவித்தது. பொருளாதார மந்தநிலை காரணத்தால் நீக்க முடிவு செய்யப்பட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பால் அமேசான் நிறுவனத்துக்கு ஒரே நாளில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்துக்கு 834 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.