தமிழக எம்.பியுடன் அமெரிக்க வாழ் தொழில்முனைவோர்கள் சந்திப்பு

வட அமெரிக்கா

தமிழக எம்.பியான திரு. T.K.S. இளங்கோவன் அவர்கள் பணி நிமித்தமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமெரிக்க தலைநகர் வாசிங்டன் டிசி வாழ் தமிழர்கள் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெரிலென்ட் மாகாணத்தின் முன்னாள் வெளியுரவுத்துறை துணை அமைச்சரான முனைவர் திரு இராஜன் நடராஐன், வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. இராஜாராம் சீனிவாசன், ஆசிய இந்திய கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான திரு. கோபிநாத் துர்கையநாயிடு, அமெரிக்க இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் திரு. எலிசா புலிவர்த்தி, தொழில் முனைவோர்கள் திரு. முரளி பதி, திரு. ஜோகன் ஆன்டனி, திரு. ரவி காத்தமுத்து, முன்னாள் தமிழ்ச்சங்க தலைவர்கள் திரு. அகத்தின் ஜான் பெனடிக்ட் மற்றும் முனைவர். நாகராஜ சேதுராமன், அமெரிக்க திமுக உறுப்பினர் திரு. யோகராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அமெரிக்க இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பாக எம்.பி திரு. T.K.S. இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு பட்டையமும் பொன்னாடையும் அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. வாஷிங்டன் வாழ் தமிழர்கள் பொன்னாடை அணிவித்து தங்கள் மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.