அமெரிக்க முன்னணித் தொழிலதிபர் எலோன் மஸ்க்-நிறுவனங்களும், சர்ச்சைகளும்

உலகம் வட அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் அவர்களுடைய பேச்சும், செயலும், வணிகத்தை கையாளும் திறனும் வெகுவாக மக்களை ஈர்க்கும். அது மக்களிடையே பேசுபொருளாக இருக்கும். அவ்வாறு கடந்த சில வருடங்களில் சமூக வலைதளங்களில், இணையத்தில் அதிகம் பேசப்பட்ட உலகப் பணக்காரர் எலோன் மஸ்க்.
எலோக் மஸ்க் தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர். பிறகு கனடாவில் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். பின்னர் அமெரிக்கா குடிப்பெயர்ந்த மஸ்க் கலிபோர்னியா மாநாகத்தில் வசிக்கத் தொடங்கினார். ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தை முதலில் தொடங்கிய மஸ்க் பின்னர் பிரபல எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை டெஸ்லாவில் முதலீடு செய்தார். அதன்பின் 2008 டெஸ்லாவை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மஸ்க் அதன் தலைமை நிர்வாகியானார்.
2022ம் ஆண்டு பிரபல அமெரிக்க நிறுவனமான டிவிட்டர் விலைக்கு வாங்கப்போவதாக அறிவித்தார். அதன் மதிப்பு சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர். பின்னர் அதனை கைவிடுவதாக அறிவித்தார். அதன்பின் சட்டரீதியாக நடந்த பண பரிவர்த்தனையை முடித்துவைக்க அந்நிறுவனத்துடன் வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு சமூகவலைதளத்தில் பேசு பொருளாக ஆன எலோன் மஸ்க் பின்னர் உலகின் மிகப் பிரபல கால்பந்து அணியான மேன்செஸ்ட்டர் யுனைட்டட் அணியை விலைக்கு வாங்கப் போவதாக சில வதந்நிகள் கிளம்பின. அதனை அவர் மறுத்தார். இன்றையத் தேதியில் எலோன் மஸ்க் சொத்து மதிப்பு 266 பில்லியன் அமெரிக்க டாலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *