அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரில் இயங்கி வந்த இரட்டை கட்டங்கள் இடிக்கப்பட்ட தினம் இன்று. 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் தான் மிகக் கொடூர, துயரமான சம்பவம் நடந்தேறியது. அன்றைய பொழுது நியூயார்க் மக்களுக்கு நல்லதொரு பொழுதாகவே விடிந்தது. ஆனால் விடிந்தபின் அந்த நாள் மிக மோசமானதொரு சம்பவத்தை எதிர்கொள்ளும் என்று சற்றும் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த இரட்டை கட்டிடங்களில் உலக வர்த்தக மையம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால் பல நிறுவனங்களின் அலுவலகங்கள், பல்லாயிரம் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தினர்.
சரியாக காலை 8:46 மணிக்கு ஒரு விமானம் வடக்கு கோபுரத்தில் மோதி அதை நிலைகுழையச் செய்தது. இந்த அதிர்ச்சியை உணர்வதுக்குள் 9:03 மணிக்கு இன்னொரு விமானம் தெற்கு கோபுரத்தில் மோதி சரியச் செய்தது. அதன்பின் 9:37 மணிக்கு மூன்றாவது விமானம் ராணுவத் தலைமையிடமான பென்டகனில் மோதியது. நான்காவது விமானம் வாஷிங்டன் நோக்கி பறந்தது. அது நடுவழியிலேயே வெடித்து சிதறியது.
அதன் பின்னரே தெரிந்தது இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்று. வடகிழக்குப் பகுதியிலிருந்து கலிபோர்னியாவிற்கு பறந்த இந்த விமானங்களை கடத்தி இச்செயல்கள் அரங்கேற்றியிருக்கிறார்கள். இச்செயலை செய்தது அல்கொய்தா தீவிரவாத அமைப்பு என்றும், ஒசாமா பின் லேடன் இந்த அமைப்பின் தலைவன் என்றும் தெரிய வந்தது.
110 அடுக்குகள் கொண்ட இந்த வானுயரக் கட்டிடங்கள் வெறும் ஒரு மணி நேரம் 42 நிமிடகங்ளில் சுக்கு நூறாக நொறுங்கி தரைமட்டமானது. கிட்டதட்ட 3000 பேர்கள் இறந்துபோயினர். 25,000 பேர் காயமடைந்தனர். இந்த தீவிரவாத சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.