உலக வங்கியின் தலைவராக டேவிட் மல்பாஸ் உள்ளார். இவர் அந்த பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் பரிந்துரைந்துள்ளார். உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இதன் நோக்கம் என்பது வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை குறைப்பதாகும். இதனால் உலக வங்கியின் தலைவர் என்பது பொதுவாக அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்நிலையில் தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற அஜய் பங்கா பரிந்துரை செய்யப்பட்டுள்ளது முக்கிய அம்சமாகும். உலக வங்கியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஜய் பங்காவின் வயது 63 ஆகும். இவர் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
இவர் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.