இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சியில் நொறுங்கி விபத்துக்குள்ளானது – மூவர் படுகாயம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி வானிலை

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடலோர ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்காக விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது. 25 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்ய சோதனை செய்துகொண்டு இருக்கும் போதே ஹெலிஹாப்ட்டர் விழுந்து நொறுங்கியது. விபத்தினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையின் ஏஎல்எச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டர் இன்று கொச்சியில் படையின் விமானிகள் ஹெலிகாப்டரை சோதனை செய்து கொண்டிருந்தபோது கட்டாயமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்தது. கட்டாயமாக தரையிறங்க வேண்டிய போது ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்தது. ALH துருவ் கடற்படையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய கடலோர காவல்படை செயல்பட்டு வருகிறது என்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *