பொன்னியின் செல்வன் பாதையில் ஓர் பயணம் – சுற்றுலாத் துறையின் ஓர் புதுமுயற்சி

கலை / கலாச்சாரம் சுற்றுலா தமிழ்நாடு மண்மணம் மற்றவை

பொன்னியின் செல்வன் என்றாலே வரலாற்று ஆர்வலர்கள், புத்தகப் பிரியர்களுக்கு ஓர் அளவிடமுடியாத மகிழ்ச்சி. ஏனெனில் சோழப் பேரரசின் பலரைப் பற்றிய சிறப்பும், சோழ ராஜியத்தின் மிக முக்கிய அரசனான ராஜராஜன், வந்தியத்தேவன், நத்தினி, இளையபிராட்டி குந்தவை நாச்சியார் என அனைவரையும் பற்றிய ஓர் காவியம் இந்த பொன்னியின் செல்வன். இந்த நாவலில் பல சம்பவங்கள் கற்பனையென்றாலும், இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள் சோழர்களால் ஆளப்பட்டவை. சோழ ராஜியத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.
ஆதித்திய கரிகாலன் வாழ்ந்த காஞ்சி, சோழ தேசத்தின் தலைநகரமான தஞ்சை, சோழ தேசத்தின் இன்னொரு தலைநகரான உறையூர், கடம்பூர், கோடியக்கரை, திருவாரூர், சோழர்களால் உருவாக்கப்பட்டு இன்றளவும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வீரநாராயண ஏரி அல்லது வீராணம் ஏரி, காவிரி பாயும் பகுதிகள், காவிரியில் இருந்து பிரியும் கொள்ளிடம் என இவையனைத்தும் தமிழகத்தில் இன்றளவும் செயல்பாட்டில் இருக்கும் ஊர்கள் மற்றும் பகுதிகளாகும்.
பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டது போல இந்த ஊர்கள் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாவல் இப்போது திரைப்படமாகவும் வெளியாக உள்ளது. இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கல்கி குழுமமும் பொன்னியின் செல்வன் பயணித்த பாதையில் ஓர் பயணம் என்ற வரலாற்று ஆவணத்தை எடுக்கின்றனர். இதனால் தமிழகச் சுற்றுலாத்துறை புது முயற்சியாக சுற்றுலாப் பயணிகளை பொன்னியின் செல்வன் பயணித்த அனைத்து ஊர்களுக்கும் பயண ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர். பயணிகளோடு வரலாற்று ஆய்வாளர் ஒருவரும் பயணிப்பார். இவர் இந்த ஊர்கள் அன்றைய சோழ ராஜ்யத்தின் போது இருந்த சிறப்புகளும், அப்போது நடந்த சம்பவங்கள் பற்றியும் விவரிப்பார்.
சோழர்களின் பெருமையை உலகமறிந்தாலும், இன்றைய தலைமுறைக்கு இந்தத் திட்டம் இன்னும் அவர்களது பெருமையைக் கொண்டுபோய் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *