நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை , இறந்த உடல்கள் தகனம் செய்ய காத்திருப்பு போன்ற செய்திகளை கடந்துவந்துருப்பீர்கள்.
கடந்த வாரம் வரை வடமாநிலங்களில், கொரானா நோயுற்று இறந்தவர்களின் உடல்கள் எரிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அது போன்ற செய்திகள் தமிழகத்திலும் வருகிறது.
நாட்டின் ஒருபுறத்தில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மூர் கடைத்தெருக்களில் மக்கள் அந்த தீவிரத்தை உணராமல்,எந்த வித அச்சமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக உலவுவதைக் காணமுடிகிறது.அதிலும் சிலர் முககவசம் அணியாமலும்,சமூக இடைவெளியை பின்பற்றாமாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சிப்படுப்பவதை காணமுடிகிறது.
ஒருபுறம் அரசு சாமானிய மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட கூடாது என இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துருக்கும் நிலையில்,நோய்தொற்றின் பாதிப்பு தினமும் புதிய உச்சம் தொடுகிறது.
ஒப்பீட்டளவில் பார்த்தால், முதல் அலை விட இரண்டாம் அலை தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
என்ன வேலையாக இருந்தாலும் அது உங்கள் உயிரையும் விடவும் முக்கியமா என சிந்தித்து பார்க்க வேண்டும்.
இனிவரும் நாட்களில் அரசின் கடுமையான கட்டுப்பாடுகளும்,பொது மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே விரைவாக இந்நோய் தொற்றிலிருந்து விடுப்பட்டு சகஜ வாழ்விற்கு திரும்ப முடியும்.