அன்னை தமிழ் மன்றம் – பஹ்ரைன் – சமூக நற்பணிகளோடு இணைந்த 75வது சுதந்திர தின விழா!

நிகழ்வுகள்

 நமது இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக பஹ்ரைன் சித்ராவில் இயங்கி வரும் தொழிலாளர் நல விடுதியில் சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் திரு.செந்தில் GK அவர்கள் தலைமை வகிக்க, விழாவை   மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு. தாமரை கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். தொழிலாளர் களுக்கு  மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுதல்,   தற்கொலைக்கு எதிரான மன அழுத்தத்தைக் குறைத்து நல்லொழுக்க பாதையில் செல்லுதல், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஆகிய  நற்கருத்துகளை பொதுச் செயலாளர் வழங்கினார். மேலும் அன்னை தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளையும், மன்றத்தின் சார்பாக செய்யப்பட்டு வரும்  பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் குறித்தும் மன்ற துணைபொருளாளர் திரு.விமல் அவர்கள் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து அன்னை தமிழ் மன்ற துணை பொதுச் செயலாளர் திரு.பிளஸ்லின் செல்லையா அவர்கள் முடிவுரை வழங்கினார்.  அதன் பின்னர்  சுமார் 300க்கும்  அதிகமான நம் தமிழ் மற்றும் இந்தியத்  தொழிலாளர்களுக்கு உணவு, பழங்கள், ஊட்டச்சத்து (ORS) பொடி மற்றும் குளிர்பானங்கள் வழங்கபட்டது.  செயற்குழு உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன்,  கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு,  சுதந்திர தின விழா மிகச்சிறப்பாக, தேசிய கீதத்தோடு நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.