15 வயது இந்திய மாணவராண தேஜாஸ் ரவிசஙர் உக்ரைன் போர் அகதிகளுக்காக ‘Refuge’ என்ற பெயரில் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதை கைப்பேசியிக் பதிவிறக்கம் செய்துகொண்டு, உக்ரைன் போர் அகதிகள் தங்கள் தேசிய அடையாளத்தை அதிகாரிகளிடம் உறுதி செய்து காட்ட முடியும்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் இடத்துக்கு அருகில் எங்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் போன்றவைகள் கிடைக்கும் போன்ற விவரங்களை விரைவாகவும் துல்லியமாகவும் அறிய முடிகிறது. மேலும் அகதிகளுக்கு உதவும் மையங்கள் எங்கே உள்ளன, எப்படி அங்கு செல்ல வேண்டும் போன்ற தகவல்களையும் இந்தச் செயலி கொண்டு அறியலாம். 12 மொழிகளில் செயலியைப் பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
தேஜாஸ், இந்த செயலியை உருவாக்க எடுத்துக் கொண்ட கால அளவு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகும். இது சிறந்த சாதனையாக, மனிதநேய செயல்களுக்கான எடுத்துகாட்டாக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.