ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் நேரடி விற்பனை மையத்தை மும்பையில் தொடங்கி வைத்தார் அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக்

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் விற்பனையை உயர்த்துவதற்கு இந்தியாவை தனது முக்கிய விற்பனை மண்டலமாக மாற்றி கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5 சதவீதம் குறைந்தாலும் இந்தியாவின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டது அதே நேரம் இந்தியாவிற்கென்று ஆன்லைன் விற்பனை மையத்தை மட்டும் உருவாகியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்கள் இல்லைஇந்த நிலையில், இந்தியாவில் கிளைகளை அமைத்து தொழிலை பெருக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம் முதற்கட்டமாக மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் தனது விற்பனை நிலையத்தை திறக்க இருக்கிறது.இதில் பார்வையாளர்களை கவரும் வண்ணங்களில் மடிக்கணினிகள் , ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் அது சார்ந்த பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து டெல்லியிலும் தனது 2வது விற்பனை நிலையத்தை ஆப்பிள் நிறுவனம் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *