ஒவ்வொரு விநாடிக்கும் ரூ.1.48லட்சம் லாபம் ஈட்டும் ஆப்பிள் நிறுவனம்

Nri தமிழ் வணிகம் உலகம் செய்திகள் வட அமெரிக்கா

உலகளவில் தனியார் மையம் அதிகரித்து வரும் நிலையில், உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. இதன் காரணமாக ஒரு இடத்தில் உள்ள நிறுவனம் தனது பொருளை உலகெங்கும் விற்பனை செய்ய முடிகிறது. இதன் காரணமாக அதன் வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது.
அதுதவிர இந்த டிஜிட்டல் உலகில் தொழிற்நுட்பம் மூலம் சேவையை வழங்கும் நிறுவனங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. இது தவிர உலகில் எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வால் உலக பொருளாதாரமே பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு நேரம் லாபத்தில் கொழுத்த நிறுவனங்கள் கூட அடுத்த சில நாட்களில் நஷ்டம் அடையும் சூழலும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், உலகில் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் குறித்தும், நஷ்டமடையும் நிறுவனங்கள் குறித்ததுமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன் படி உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஒரு நாளில் மட்டும் 1,282 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் வினாடிக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறது.
அடுத்த இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், உலக பணக்காரர் வாரன் பபெட் தலைவராக இயங்கும் பெர்க்சயர் ஹாதவே நிறுவனம் மூன்றாவது இடத்திலும், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் லாபம் ஈட்டும் நிறுவனங்களில் நான்காவது இடத்திலும் உள்ளது.
அதேநேரம் உலக அளவில் டாக்ஸி சேவையில் ஈடுபடும் ஊபர் நிறுவன உலகளவில் அதிக அளவில் நஷ்டமடையும் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் வினாடிக்கு 17,556 ரூபாய் இழப்பீட்டை சந்தித்து வருவதாக அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.