அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில், H-1B விசாக்களுக்கான ஆரம்ப பதிவுகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 18, 2022 வரை திறந்திருக்கும் என்று கூறியுள்ளது.இக்காலகட்டத்தில், வருங்கால மனுதாரர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்கள் ஆன்லைன் H-1B பதிவு முறையைப் பயன்படுத்தி தங்கள் பதிவுகளை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கா 65,000 புதிய H-1B விசாக்களை வழங்குகிறது, மேலும் 20,000 அமெரிக்க முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு H-1B விசா ஒதுக்கப்பட்டுள்ளது.
2021 நிதியாண்டில் 6,182 ஒப்புதல்களுடன், அமேசான் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட H-1B மனுக்களைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து Infosys (5,256), TCS (3,063), Wipro (2,121) Cognizant (1,481), Google (1,453), IBM (1,402), HCL அமெரிக்கா (1,299) மற்றும் மைக்ரோசாப்ட் (1,240). மூன்றாம் தரப்புத் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை USCIS தீர்ப்பளிக்கும் விதத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, FY2021 இல் ஒட்டுமொத்த விசா மறுப்பு விகிதம் 4% ஆகக் குறைந்ததுள்ளது.
FY 2023 H-1B விசாவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு பதிவுக்கும் USCIS உறுதிப்படுத்தல் எண்ணை ஒதுக்கும், இது பதிவுகளைக் கண்காணிக்கப் பயன்படும். ஏஜென்சி இப்போது பின்பற்றும் புதிய அமைப்பின் கீழ், விண்ணப்பதாரர்கள் மின்னணு முறையில் பதிவு செய்து $10 பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவார்கள்.
மார்ச் 18 ஆம் தேதிக்குள் போதுமான பதிவுகளைப் பெற்றால், நாங்கள் தோராயமாக பதிவுகளைத் தேர்ந்தெடுத்து பயனர்களின் myUSCIS ஆன்லைன் கணக்குகள் வழியாக தேர்வு அறிவிப்புகளை அனுப்புவோம். மார்ச் 31 ஆம் தேதிக்குள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அறிவிக்க உத்தேசித்துள்ளோம்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் புதிய விசாக்களின் மூலம் 70% பயன்பெறும் பயனாளிகளாய் இந்தியர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், USCIS ஆனது ஆரம்பத் தேர்வைத் தொடர்ந்து போதுமான இறுதி விண்ணப்பங்களைப் பெறாததால், அனைத்து விசாக்களையும் ஒதுக்கீடு செய்ய பல லாட்டரிகளை நடத்த வேண்டியிருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக குறைவான பயணம் மற்றும் நடமாட்டம் உள்ளிட்ட காரணிகளின் கலவையே இதற்குக் காரணம்.