ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் பண்பாடு அருங்காட்சியகம் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு கௌதம சன்னா அவர்கள் ஆகியோரை இன்று காலை ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் ஜெர்மனி தமிழ் சங்க நண்பர்கள் வரவேற்றனர்.
இந்த கண்காட்சியானது 8 மாத காலம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி தொடங்கி மே 8, 2023 வரை தொடர்ந்து நடைபெறும்.
இங்கு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செல்டிக் மன்னன் ஒருவரது எலும்புக்கூடு, அத்தோடு புதைக்கப்பட்ட அவனது தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட தேர் படுக்கை மற்றும் பல்வேறு பொருட்கள்… இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களையும் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களும் தமிழக அரசின் செயலர் சந்திரமோகன் அவர்களும் பார்வையிட்டனர். இந்தப் பொருட்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறும் என்பது குறிப்படத்தக்கது.
ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு குறிப்பாக ஜெர்மனியில் வாழும் தமிழர்களுக்கு இதுவொரு அறிய வாய்ப்பு. தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் பார்வையிட இது ஒரு சந்தர்ப்பம்.