உணவுத் துறையிலும் அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ; அறிவியல் புரட்சியில் அடுத்த கட்டம்

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்கலைகழத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை , விதவிதமான ஆடைகளுடன் தோன்றுதல், வாட்சப்பில் பதில் அனுப்புதல் , இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் AI ன் உதவியுடன் ஆச்சர்யதக்க வகையில் புதிய சாதனைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள்.
உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்துவதால் மக்களுக்கான உணவுத் தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவரை உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கணிசமான அளவு மனித வளமும் , அதற்கு சமமான அளவு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்த அளவுகோலால் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது கடினம்.
2050 ஆம் ஆண்டில் உலகின் உணவுத் தேவை 59 முதல் 98 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த பெரிய அளவிலான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய, செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தலாம் எனவும் இதன் மூலம் உணவு சங்கிலி மேலாண்மை, உணவு உற்பத்தி மற்றும் மேம்பாடு, உணவு-தர மேம்பாடு மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கையாளலாம் என ஆராய்ச்சியாளரான நிவாஸ் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சில உணவு சார்ந்த நிறுவனங்கள் தங்களது வணிகங்களில் AI ஐ பயன்படுத்தி தங்களது வணிகத்தை ஒருங்கிணைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள தி யெல்லோ ஹவுஸ் என்ற உணவகத்தில் ரூபி என்ற ரோபோ AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல சென்னையிலும் இந்தியாவின் முதல் ரோபோ ஹோட்டல் செயல்படுகிறது. ரோபோ தீம் ரெஸ்டாரண்ட் எனும் பெயரில் செயல்படும் இந்த நிறுவனம் சென்னை செம்மஞ்சேரி மற்றும் போரூரில் செயல்படுகிறது.
உணவுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் என்ன மாதிரியான உதவிகள் செய்ய இயலும் என நிவாஸ் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார். அவை..
-AI தொழிநுட்பத்தில் உள்ள பகுப்பாய்வு திறன் மூலம் வாடிக்கையாளரின் ரசனை, ருசிகளுக்கு ஏற்ப உணவினை தயாரிக்க இயலும்
– AI தொழில்நுட்பம் சரக்கு மேலாண்மை, ஏற்றுமதி செலவை குறைத்தல், கழிவுகளை மேலாண்மை செய்தல் போன்றவற்றில் உதவும்
– AI தொழில்நுட்பம் உணவு பட்டியல் மற்றும் உணவினை வரிசைப்படுத்தல் செயல்முறைகளை, பற்றாக்குறை போன்றவற்றை தானியங்கி செயல்முறையின் கண்காணிக்கும் வசதியை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *