அமெரிக்க நாட்டின் முதல் தெற்காசியவைச் சேர்ந்த ஒருவர் நியூயார்க்கின் தெற்கு மாவடத்திற்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் ஜோ பைடன் இந்த நியமனத்தைச் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை, குறிப்பாக தமிழ் வம்சாவளியைக் கொண்ட பலர் அமெரிக்க நாட்டில் பல முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அதில் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி போன்றோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
அதிலும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் மிக முக்கிய உயரியப் பொறுப்பான துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கடந்த 2020ம் ஆண்டு வெற்றிப் பெற்றார். அதன்பின் தற்போது நீதித் துறையில் தமிழ் வம்சாவளியைச் சார்ந்த அருண் சுப்ரமணியன் என்பவர் நியூயார்க்கின் தெற்கு மாவட்டதிற்கு நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் கொலம்பிய சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, 2007ம் ஆண்டு முதல் மறைந்த அமெரிக்க உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ரூத் பாடெர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
இவரது தேர்வு நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஓர் எடுத்துகாட்டாகும் என வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.