ஆசியக் கோப்பை 2022 – இந்தியா அணியின் அசத்தல் வெற்றிகள்

இந்தியா செய்திகள் விளையாட்டு

உலகளவில் விளையாட்டுத் துறையில் அதிகம் ரகிகர்களைக் கொண்டது கிரிக்கெட் விளையாட்டு. இந்திய அளவில் டென்னிஸ், கால்பந்து மற்றும் தடகளம் பிரபலமாக இருந்தாலும், கிரிக்கெட் தெருவெங்கும் விளையாடும் அளவிற்கு அனைவரிடமும் பரிட்சையம். கிரிக்கெட் போட்டி முன்பெல்லாம் உலக அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒருநாள் உலகக் கோப்பையாக நடைபெறுவது வழக்கம். ஆசியக் கண்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மிகவும் பிரபலம் மற்றும் முறையே உலகக் கோப்பையையும் வென்றிருக்கிறது இவ்வணிகள்.
பிற்காலத்தில் ஆசியக் கண்டத்தின் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோன்றின. அதன்பின் தற்போது ஹாங்காங் அணியும் உள்ளது. இதனால் ஆசிய அணிகள் கொண்ட ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. குருப் 1 அணியில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும். குருப் 2ல் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளது. ஒவ்வொரு குழுவில் உள்ள அணிகளுக்கிடையே லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தியா பாகிஸ்தான் ஆட்டமானது எப்பொழுதுமே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கும். இந்தமுறையும் அந்த பரபரப்புக்கு பஞ்சமில்லை. முதல் ஆட்டத்தில் இந்திய ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியா வென்றது. அதன்பின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், ஹாங்காங் அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹாங்காங் ஆட்டக்காரர்கள் இந்திய பவுலர்களுக்கு சவாலாக இருந்தாலும் இந்தியா நிதானமாக விளையாடி வெற்றியைப் பெற்றது.
இந்தியா தான் ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. குருப் 2ல் ஆப்கானிஸ்தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் உள்ளது. இந்த ஆசியக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *