ஆஸ்திரேலியா தமிழ் கலாச்சாரக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவு விழா

ஆஸ்திரேலியா உலகம் செய்திகள் தமிழ் சங்கங்கள்

தமிழ் காலாச்சாரக் கழகம் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டதன் 30வது ஆண்டு நிறைவு விழா கான்பரா நகரில் ஓர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றும் இன்றும் என்றும் என்றத் தலைப்பில் இவ்விழா சிறப்பாக முடிவுற்றது. இந்த கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்புகளைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறது.
கோவிட் பாதிப்புக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதைக் குறிக்கும் வகையிலும், சமுதாய மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உறவாட ஒரு சந்தர்ப்பமாகவும் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இது அமைந்தது.
தமிழ்ப் புத்தாண்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அலங்கார வண்டியை மந்திர் இசைப்பள்ளி உருவாக்கி இருந்தது. பரத நாட்டியம், குச்சிப்படி நடனம், பல்வேறு நடனங்கள், பாடல்கள் இடம் பெற்றன. தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 18 நிகழ்ச்சிகளை, 65 பேர் நிகழ்த்தினர். தமிழ்ப்பெண்கள் குத்துவிளக்கேற்ற நிகழ்வுகள் தொடங்கின.
தமிழ்த்தாய் வாழ்த்து அனைவராலும் பாடப்பட்டதுஇந்த கழகத்தின் 6 இளைஞர்கள் பாரம்பரிய உடையில் வந்து ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசினர். கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் படத் தொகுப்பு காட்டபபட்டது.
இந்திய துணைத்தூதர் சுனீத் மேத்தா பேசுகையில், ஆஸ்திரேலிய பொருளாதாரம் மற்றும் சமுதாயத்திற்கு தமிழ்ச் சமுதாயம் அரிய பங்காற்றியுள்ளதை ஆஸ்திரேலியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இன்றைய நிகழ்வு தென் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆஸ்திரேலிய பல்கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்துவதாக தமிழ்க் கலாச்சாரம் அமைந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.